Archives: Scammers
தெரியாத எண்ணிலிருந்து வரும் தனிப்பட்ட செய்தி
மோசடி பேர்வழிகள் சந்தேகம் கொள்ளாத பயனர்களைப் போலி நட்பின்மூலம் அவர்களை ஏமாற்றி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான ஒரு முறை கடவுச் சொல் (OTP), உங்களுடைய செய்தியிடல் 2FA (தனிப்பட்ட அடையாள எண்)PIN அல்லது பதிவுக் குறியீடு ஆகியவற்றை வெளிப்படுத்துமாறு வேண்டுவார்கள். இயங்கலையில் நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்
இயங்கலை நண்பர்களைக் கையாளுதல்
மோசடி பேர்வழிகள் சந்தேகம் கொள்ளாத பயனர்களுடன் நட்பு கொள்வதன் மூலம் அவர்களை ஏமாற்றி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தவும், பணம் அனுப்பவும், இணைப்புகளைச் சொடுக்கவும், தீங்குநிரலைப் பதிவிறக்கவும் அல்லது கணினி திரையைப் பகிரவும் தூண்டுகின்றனர். இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.
முதலீட்டு மோசடி
முதலீட்டு மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் தளங்களில் கோரப்படாத செய்திகள் வழியாக அல்லது சந்தேகத்திற்கு இடமில்லாத பயனருடன் நட்பு கொள்வதன் மூலம் விளம்பரம் செய்து, கவர்ச்சிகரமான முதலீடுகளை வழங்கி அவர்களின் பணத்தை ஏமாற்றுகிறார்கள். இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.
கடன் மோசடி
கடன் மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி தளங்களில் சந்தேகத்திற்கு இடமில்லாத பயனர்களைக் கவர்ச்சிகரமான முறையில் கடன் சலுகைகள் என்ற சாக்கில் அவர்களின் பணத்தை ஏமாற்ற பயன்படுத்த முயல்கின்றனர்
இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.
அதிர்ஷ்ட குலுக்கு மோசடி
அதிர்ஷ்ட குலுக்கு மோசடி செய்பவர்கள் பரிசு வென்ற சாக்கைப் பயன்படுத்தி சந்தேகம்கொள்ளாத பயனர்களின் பணத்தை பரிமாற்றுவதற்கும், ஒரு முறை கடவுச்சொற்கள் (ஓடிபி) போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதற்கும் ஏமாற்றுகிறார்கள். இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.