பாதுகாப்பே நம் முன்னுரிமை

மின்னிலக்கமயம் அதிகரித்துவரும் உலகில், பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் இருப்பது
மிகவும் முக்கியம்.
இன்றைய உலகம் நம் விரல்நுனியில் இருக்கிறது. ஆனால், அதே சமயத்தில், நாம் பொறுப்புள்ள குடிமக்களாக நமது பங்கைச் செய்து, மோசடிகளுக்கு இலக்காகாதிருக்கத் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மின்னிலக்கத் தளத்தை நீங்கள் பாதுகாப்பான முறையில்
ஆராய உதவும் சில வளங்களை இங்குக் காணலாம்.

இணையம்வழி பொருள் வாங்கும்போது பாதுகாப்பாக இருங்கள்

இணையத்தில் பலவகை பொருட்களையும் ஆராய்வது கேளிக்கையாக இருக்கும்!
இது மிகவும் வசதியானது.
ஒரு விசையை அழுத்தினால்
போதும். நமக்குத் தேவையான
அனைத்தும் கிடைத்துவிடும்.
ஆனால், இந்த நன்மைகளை
அனுபவிக்கும் அதே வேளையில்,
பாதுகாப்பாக இருப்பதன்
முக்கியத்துவத்தை நாம்
புரிந்துகொள்வது அவசியம்.
நீங்கள் வெவ்வேறு வகையான
மோசடிகளை அடையாளம் காண
உதவும் வளங்களையும்,
இணையத்தில் பாதுகாப்பாக
இருக்க வழிகாட்டும்
குறிப்புகளையும் இங்குக்
காணலாம்.

உடன் இணைந்து