பாதுகாப்பே நம் முன்னுரிமை

மின்னிலக்கமயம் அதிகரித்துவரும் உலகில், பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் இருப்பது
மிகவும் முக்கியம்.

பாதுகாப்பே நம் முன்னுரிமை

மின்னிலக்கமயம் அதிகரித்துவரும் உலகில், பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் இருப்பது
மிகவும் முக்கியம்.

இன்றைய உலகம் நம் விரல்நுனியில் இருக்கிறது. ஆனால், அதே சமயத்தில், நாம் பொறுப்புள்ள குடிமக்களாக நமது பங்கைச் செய்து, மோசடிகளுக்கு இலக்காகாதிருக்கத் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மின்னிலக்கத் தளத்தை நீங்கள் பாதுகாப்பான முறையில்
ஆராய உதவும் சில வளங்களை இங்குக் காணலாம்.

இயங்கலை வாயிலாக மோசடிகளைக் கண்டறிவதன் மூலம் பாதுகாப்பாக இருத்தல்.

மோசடி பேர்வழிகள் தற்போது இணையத்தில் அதிநவீனமாகிவிட்டதால், சமீபகால மோசடிகள் மற்றும் அவற்றின் எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி அறிந்திருப்பது மிக அவசியமாகும். அறிகுறிகளைக் கண்டறியவும் எங்கள் காணொளிகளைப் பார்த்து, உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் இயங்கலையில் பாதுகாப்பாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகளை அறியவும்.

அரசு அதிகாரிகள் ஆள்மாறாட்ட மோசடி

மோசடி பேர்வழிகள் அதிகாரத்தில் உள்ளவர்கள்போல் ஆள்மாறாட்டம் செய்து, அவர்களின் நற்பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். காணொளியைப் பார்த்து இயங்கலையில் நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளவும்.

தெரியாத எண்ணிலிருந்து வரும் தனிப்பட்ட செய்தி

மோசடி பேர்வழிகள் சந்தேகம் கொள்ளாத பயனர்களைப் போலி நட்பின்மூலம் அவர்களை ஏமாற்றி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான ஒரு முறை கடவுச் சொல் (OTP), உங்களுடைய செய்தியிடல் 2FA (தனிப்பட்ட அடையாள எண்)PIN அல்லது பதிவுக் குறியீடு ஆகியவற்றை வெளிப்படுத்துமாறு வேண்டுவார்கள். இயங்கலையில் நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்

இயங்கலை நண்பர்களைக் கையாளுதல்

மோசடி பேர்வழிகள் சந்தேகம் கொள்ளாத பயனர்களுடன் நட்பு கொள்வதன் மூலம் அவர்களை ஏமாற்றி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தவும், பணம் அனுப்பவும், இணைப்புகளைச் சொடுக்கவும், தீங்குநிரலைப் பதிவிறக்கவும் அல்லது கணினி திரையைப் பகிரவும் தூண்டுகின்றனர். இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.

சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடி

சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடி செய்பவர்கள் சமூக ஊடக தளங்களில் சந்தேகம் கொள்ளாத பயனர்களின் தொடர்புள்ள நண்பர்களிடம் ஆள்மாறாட்டம் செய்து அவர்களின் பணத்தை ஏமாற்ற முயல்கிறார்கள். இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.

முதலீட்டு மோசடி

முதலீட்டு மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் தளங்களில் கோரப்படாத செய்திகள் வழியாக அல்லது சந்தேகத்திற்கு இடமில்லாத பயனருடன் நட்பு கொள்வதன் மூலம் விளம்பரம் செய்து, கவர்ச்சிகரமான முதலீடுகளை வழங்கி அவர்களின் பணத்தை ஏமாற்றுகிறார்கள். இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.

வேலை மோசடி

வேலை மோசடி செய்பவர்கள் சந்தேகம் கொள்ளாத பயனர்களிடம் எளிதான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனக்கூறி, அவர்களின் பணத்தை ஏமாற்றவும் அல்லது அவர்களின் சிங்பாஸை அணுகவும் முயல்கின்றனர். இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.

கடன் மோசடி

கடன் மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி தளங்களில் சந்தேகத்திற்கு இடமில்லாத பயனர்களைக் கவர்ச்சிகரமான முறையில் கடன் சலுகைகள் என்ற சாக்கில் அவர்களின் பணத்தை ஏமாற்ற பயன்படுத்த முயல்கின்றனர்
இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.

அதிர்ஷ்ட குலுக்கு மோசடி

அதிர்ஷ்ட குலுக்கு மோசடி செய்பவர்கள் பரிசு வென்ற சாக்கைப் பயன்படுத்தி சந்தேகம்கொள்ளாத பயனர்களின் பணத்தை பரிமாற்றுவதற்கும், ஒரு முறை கடவுச்சொற்கள் (ஓடிபி) போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதற்கும் ஏமாற்றுகிறார்கள். இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.

இணையவழி மோசடி

மின்வணிக மோசடி செய்பவர்கள் சந்தேகப்படாத பயனர்களை ஏமாற்றும் வகையில் அவர்கள் விரும்பிய பொருட்கள் அல்லது சேவைகளில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி பணத்தை ஏமாற்றுகிறார்கள். இயங்கலை வாயிலாக நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிய காணொளியைப் பாருங்கள்.

இணையம்வழி பொருள் வாங்கும்போது பாதுகாப்பாக இருங்கள்

இணையத்தில் பலவகை பொருட்களையும் ஆராய்வது கேளிக்கையாக இருக்கும்!
இது மிகவும் வசதியானது. ஒரு விசையை அழுத்தினால் போதும். நமக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும்.
ஆனால், இந்த நன்மைகளை அனுபவிக்கும் அதே வேளையில், பாதுகாப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்வது அவசியம். நீங்கள் வெவ்வேறு வகையான மோசடிகளை அடையாளம் காண உதவும் வளங்களையும், இணையத்தில் பாதுகாப்பாக இருக்க வழிகாட்டும் குறிப்புகளையும் இங்குக் காணலாம்.

எப்போதுமே நம்பகமான இணைய விற்பனை- யாளர்களிட- மிருந்து வாங்குங்கள்

நாம் இணையத்தில் பொருட்கள் வாங்கும்போது, சேதமடைந்தவை, திருடப்பட்டவை அல்லது மலிவான போலிகள் நமக்கு அனுப்பி வைக்கப்படலாம். அதனால்தான், எப்போதுமே நம்பகமான இணையக் கடைகளை நாடுவது முக்கியம். பாதுகாப்பாக இருக்க வழிகாட்டும் குறிப்புகளைத் தெரிந்துகொள்ளக் காணொளியைப் பாருங்கள்.
 

வாங்கு- வதற்குமுன் நிதானமாக யோசித்துப் பாருங்கள்

சில சமயங்களில், நாம் இணையம்வழி வாங்கும் பொருட்கள் நம் கைக்குக் கிடைக்காமல் போவதுண்டு. ஒருசில சம்பவங்களில்,   நமது அடையாளமும் திருடப்படுவதுண்டு. எனவே, ஒரு பரிவர்த்தனையைப் பூர்த்தி செய்வதற்குமுன் நிதானமாக யோசித்துப் பார்ப்பது முக்கியம். பாதுகாப்பாக இருக்க வழிகாட்டும் குறிப்புகளைத் தெரிந்துகொள்ள காணொளியைப் பாருங்கள்.
 

ஃபேஸ்புக்கில் மோசடிகளை எப்படி புகார் செய்வது

ஒரு மோசடியை (அல்லது உத்தேச மோசடியை) நாம் அடையாளம் காணும்போது, அதுபற்றி புகார் செய்து செயலூக்கத்துடன் செயல்படவேண்டும். ஃபேஸ்புக்கில் புகார் செய்வதற்கு இந்தக் காணொளியைப் பார்த்து வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
 

இன்ஸ்டா-
கிராமில் மோசடிகளை எப்படி புகார் செய்வது

ஒரு மோசடியை (அல்லது உத்தேச மோசடியை) நாம் அடையாளம் காணும்போது, அதுபற்றி புகார் செய்து செயலூக்கத்துடன் செயல்படவேண்டும். இன்ஸ்டாகிராமில் புகார் செய்வதற்கு இந்தக் காணொளியைப் பார்த்து வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
 

உடன் இணைந்து

To help personalize content, tailor and measure ads, and provide a safer experience, we use cookies. By clicking or navigating the site, you agree to allow our collection of information on and off Facebook through cookies. Learn more, including about available controls: Cookies Policy